×

கரூர் ஆண்டாங்கோவில் ராஜவாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரைகள்

கரூர்: கரூர் ஆண்டாங்கோவில் ராஜ வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமராவதி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் முக்கியமான முக்கிய வாய்க்கால்களில் ராஜ வாய்க்கால் முதன்மையானதாகும்.இப்பகுதியில் இருந்து கரூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் நெல் கரும்பு வாழை, கோரைப்புல் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.தற்போது மழைக்காலம் என்பதால் அமராவதி ஆற்றில் ஓரளவு தண்ணீர் திறக்கப்பட்டு ராஜ வாய்க்கால் மற்றும் துணை வாய்க்கால்களில் தண்ணீர் செல்கிறது. ஆனால் முழுமையாக தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு வாய்க்கால்கள் ஆகாய தாமரை,கருவேல முட்செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பழைய சாக்கு வீடுகளில் கொட்டப்படும் கழிவுகள், வாய்க்கால்களை அடைத்து தண்ணீர் செல்ல முடியாத படி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் அல்லது விவசாய அமைப்புகள் வாய்க்கால்களில் தண்ணீர் முறையாக செல்ல முடியாமல் தடுக்கும் ஆகாயத்தாமரை மற்றும் பிற கழிவுகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

The post கரூர் ஆண்டாங்கோவில் ராஜவாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரைகள் appeared first on Dinakaran.

Tags : Agayatmarais ,Karur Andango ,Karur ,Raja Vaikal ,Andango, Karur ,Amaravati River ,
× RELATED கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு